ராமநாதபுரத்தில் தொடர் மணல் திருட்டு கனிமவளத்துறை கவனிக்குமா
ராமநாதபுரம ; ராமநாதபுரத்தில் பல இடங்களில் தொடர் மணல் திருட்டு நடக்கும் நிலையில் தடுக்க வேண்டிய கனிமவளத்துறை அதிகாரிகள் துாக்கத்தில் உள்ளனரா, என மக்கள் கேள்வி எழுப்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் தொடர் மணல் திருட்டில் அப்பகுதி மணல் திருட்டு கும்பல் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மே 18ல் உச்சிப்புளியில் போலீசார் வட்டான் வலசை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த பிரஷாத் 32, சிவக்குமார் 30, அகஸ்தியர் கூட்டம் அருன்பாண்டியன் 34, ஆகியோர் டிராக்டரில் மணல் கடத்தி வந்தனர்.மூவரும் போலீசாரை கண்டதும் டிராக்ட்டரை விட்டு விட்டு தப்பி ஓடினர்.
இதே போல் மே 25ல் உச்சிபுளி கே.பி. வலசை ரோட்டில் போலீசார் ரோந்து சென்ற போது சின்ன ரெட்டையூரணி சீனிவாசன் மகன் இன்பராஜ் 32, கதிரவன் மகன் ராஜேஸ் 32, டிராக்டரில் மணல் கடத்தி வந்தனர். போலீசாரை கண்டதும் தப்பினர்.
உச்சிப்புளி போலீசார் டிராக்டரையும் மணலையும் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
உச்சிப்புளி பகுதியில் மணல் திருட்டு தொடர்ந்து நடக்கிறது. மணல் திருட்டை தடுக்க கனிம வளத்துறை நிர்வாகமும் போலீசாரும் என்ன செய்ய போகிறார்கள், என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!