Load Image
Advertisement

ரேஷன் அரிசி நீரில் மிதப்பதால் பிளாஸ்டிக் அரிசி என பொதுமக்கள் தகராறு

Public disputes that ration rice is plastic rice as it floats in water   ரேஷன் அரிசி நீரில் மிதப்பதால்  பிளாஸ்டிக் அரிசி என பொதுமக்கள் தகராறு
ADVERTISEMENT


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 75 ஆயிரத்து 186 ரேஷன் கார்டுகளில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 738 அரிசி கார்டுகள் உள்ளன. 650க்கு மேற்பட்ட ரேஷன் கடைகள் ரேஷனில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகிய பொருட்கள் ஒவ்வொரு மாதமும் இறுதிவரை வழங்கப்படுகிறது.

தற்போது ரேஷனில் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசிகளும் சேர்த்து வழங்கப்படுகிறது. இவை தனியாக நீரில் மிதப்பதால் பிளாஸ்டிக் அரிசி என பொதுமக்கள் வாங்க மறுத்து கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர்.

இது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் ரேஷனில் அரிசி வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வட்ட வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது:

மிதக்க காரணம்: வழக்கமான அரிசியில் நுண்ணுட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங், எக்ஸ்ட்ரூஷன் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தி மாவுக்கலவையில் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது. இதனால் தண்ணீரில் மிதக்கிறது. எந்த ஆபத்தும் இல்லை. இது தொடர்பாக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அச்சப்பட தேவையில்லை: பெண்கள், குழந்தைகள் ஊட்டசத்து குறைபாடு உள்ளதால் நாட்டில் இரண்டில் ஒரு பெண் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தை வளர்ச்சி குன்றியுள்ளது. இக்குறையை நிவர்த்தி செய்வதற்காக மத்திய அரசு 1 கிலோ அரிசியுடன் 10 கிராம் செறிவூட்டப்பட்ட அரிசியை கலக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், மைக்ரோகிராம், வைட்டமின் பி-3 உள்ளன. இதனை சமைக்க மாற்று வழி ஏதும் இல்லை. வழக்கம் போல பயன்படுத்தலாம், என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement