பாடப்புத்தகங்கள் பெற வரும் ஆசிரியர்களிடம் வசூல்
மதுரை ; மதுரையில் அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் பெற வரும் ஆசிரியர்களிடம் சில இடங்களில் பணம் வசூலிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஜூன் 7 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இக்கல்வியாண்டிற்கு ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வினியோகிக்கும் பணி துவங்கியுள்ளது.
'நோடல்' மையங்களில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை அரசு உத்தரவை மீறி ஆசிரியர்கள் வாகனம் ஏற்பாடு செய்து புத்தகங்களை பெற்றுச் செல்ல சில அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். ஆசிரியர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
ஆசிரியர்கள் கூறுகையில், “நோடல் மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் 'லோடு மேன்'கள் போல் பாடப் புத்தகங்களை சுமந்து செல்வதாக சர்ச்சை எழுந்ததால் வாகனம் மூலம் பள்ளிகளுக்கே பாடப் புத்தகங்கள் வினியோகிக்க அரசு உத்தரவு உள்ளது. இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் மதுரை, மேலுார் கல்வி மாவட்டங்களில் சில இடங்களில் ஆசிரியர்களே வாகனம் ஏற்பாடு செய்து வரவேண்டும் என்கின்றனர்.
மேலும் அரசு பள்ளிக்கு ரூ.100, உதவிபெறும் பள்ளிக்கு ரூ.500 வசூலிக்கின்றனர். சி.இ.ஓ., கார்த்திகா இதுகுறித்து விசாரிக்க வேண்டும்” என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!