ADVERTISEMENT
விருதுநகர் : விருதுநகரில் சி.பி.எஸ்., ரத்து, ஒப்படைப்பு விடுப்பை மீண்டும் வழங்குவது, அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அமல்படுத்திய அதே தேதியில் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மண்டல உண்ணாவிரதம் நடந்தது.
மாவட்ட தலைவர் சிவஞானம் தலைமை வகித்தார். செயலாளர் வைரவன், மாநில செயலாளர் விஜயக்குமார், ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்க செயலாளர் பரமேஸ்வரன், சத்துணவு ஊழியர் சங்க தலைவர் செல்வராஜ், வருவாய் கிராம உவியாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், ஆததிராவிட நலத்துறை அடிப்படை பணியாளர் சங்க பொது செயலாளர் பாண்டியராஜன், சாலை பராமரிப்பு உதவியாளர் சங்க செயலாளர் ஜெயசீலன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொருளாளர் மோகனவள்ளி தாயார், வேளாண்துறை அமைச்சு பணியாளர் சங்க செயலாளர் முனியாண்டி, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் புகழேந்தி பேசினர். மாவட்ட பொருளாளர் ராமர் நன்றி கூறினார். காலை 10:00 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதம் மாலை 5:00 மணிக்கு நிறைவு பெற்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!