மதுரை மேற்கு மண்டலத்தில் ரூ. 30 கோடியில் பணிகள்
திருப்பரங்குன்றம் ; மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் திருப்பரங்குன்றம் மண்டல அலுவலகத்தில் நடந்தது.
மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்தார்.உதவி கமிஷனர் சுரேஷ்குமார், நிர்வாக அலுவலர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், இந்திரா தேவி, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் பங்கேற்றனர்.
சுவிதா பேசியதாவது: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியில் வைக்கம் பெரியார் ரோட்டில் இருந்து சாமநத்தம் பெரியார் நகர் வரை சாலை விரிவாக்கம், தடுப்புச் சுவர் அமைத்தல். திருப்பரங்குன்றத்தில் ரூ.6 கோடியில் புதிய மார்க்கெட், சமுதாயக் கூடம், கிரிவலப் பாதையில் நடைபாதை அமைத்தல்.
ரூ. 6 கோடியில் தென்பரங்குன்றத்தில் கார் பார்க்கிங், திருநகர் 3 -முதல் 8வது பஸ் நிறுத்தம் வரை ரூ. 6 கோடியில் தார்சாலை மேம்பாடு, மின் கம்பங்களை ஒரு பக்கமாக மாற்றுதல், ரூ. 2 கோடியில் முத்துப்பட்டி கண்மாயை தூர்வாரி சுற்றுச்சூழல் பூங்கா அமைத்தல், கோவலன் நகரில் ரூ. 2 கோடியில் விளையாட்டு திடல் என ரூ.30 கோடிக்கு பணிகள் நிறைவேற்ற முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார், என்றார்.
கவுன்சிலர்களின் காட்டம்
கோடையில் அதிகம் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். காலை 10:00 மணிக்கு மேல் சுகாதார பணியாளர்கள் வருவதில்லை. எஸ்.ஆர்.வி., நகர், லயன்சிட்டி பகுதிகளில் ஒரு மாதமாக குடிநீர் லாரி வரவில்லை.
சிறுசிறு பணிகளுக்கான செலவுக்கும் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது. அப்புறம் எதற்கு இந்த மண்டலம்,அதிகாரிகள். பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளுக்காக 15 மாதங்களாக கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை, என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!