ஆப்பரேட்டர் தற்கொலை
கீழக்கரை : கீழக்கரை அருகே சின்ன மாயாகுளம் காமராஜர் நகரை சேர்ந்தவர் குணசேகரன் 58. இவர் மாயாகுளம் ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பம்ப் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார்.
கடந்த ஒரு வாரமாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தென்னந்தோப்பில் உள்ள மாமரத்தில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். மனைவி லிங்கசெல்வி புகாரில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் முருகதாசன் விசாரிக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!