பழநியில் இன்று வைகாசி விசாக கொடியேற்றம்
பழநி : பழநி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பழநி மலை முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம் இன்று காலை 11:30 மணிக்கு நடக்கிறது. மாலையில் சப்பரத்தில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.
ஆறாம் நாள் விழாவில் (ஜூன் 1) இரவு 7:15 மணிக்கு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம்,வைகாசி விசாகத்தன்று (ஜூன் 2 ) மாலை 4:30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. பத்தாம் நாள் (ஜூன் 5) இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!