விபத்தில் ஒருவர் பலி
திருவாடானை : திருவாடானை சிநேகவல்லிபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் 62. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு திருவாடானையிலிருந்து காரைக்குடிக்கு டூவீலரில் சென்றார். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பாரூர் பஸ்ஸ்டாப் அருகே முன்னால் சென்ற டிராக்டர் டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் ஆனந்தன் டிராக்டரின் பின்புறம் மோதினார்.
இதில் பலத்த காயமடைந்தவர் அதே இடத்தில் பலியானார். ஆனந்தன் மகன் முத்துராமலிங்கம் 36, புகாரில் திருவாடானை போலீசார் டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!