ADVERTISEMENT
திண்டுக்கல் : கோவை ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி கல்லுாரி சார்பில் விண்வெளி தொழில்நுட்பம் குறித்து ஆன்லைனில் வினாடி வினா போட்டி நடந்தது. திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளி மாணவி இறைமலர் வெற்றி பெற்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ செல்ல தகுதிபெற்றார்.
இவருக்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழா செயலாளர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம், முதன்மை முதல்வர் சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசுலோக்சனா, பத்மநாபன், ஞானபிரியதர்ஷினி, அனஞ்சியம்மாள், பிரபா, வித்யா, மணிமேகலை, கல்யாணி, மேலாளர் பிரபாகரன் பாராட்டினர்.
மாணவி இறைமலர் கூறியதாவது: திண்டுக்கல்லில் தினமலர் நாளிதழ் நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அங்கு ஸ்ரீ சக்தி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி ஸ்டாலை பார்வையிட்ட போது விண்வெளி தொழில் நுட்பம் எனும் தலைப்பில் அவர்கள் நடத்திய தேசிய ஆன்லைன் போட்டியில் பங்கேற்றேன். அதன்படி இஸ்ரோ செல்ல வாய்ப்பு கிடைத்தது,என்றார் .
* ஒட்டன்சத்திரம் பட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி கே.தான்யதாவும் தேர்வாகி உள்ளார். இவரும் இஸ்ரோ செல்ல உள்ளார். இவரை பள்ளி தாளாளர் எஸ் கண்ணம்மாள், பள்ளி முதல்வர் என்.பொன் கார்த்திக் வாழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!