ADVERTISEMENT
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் பல மாதங்களாக சிமெண்ட் தளக் கற்கள் சிதைந்து கிடப்பதால் பயணிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் நடைபாதை வழியாக தினமும் ஏராளமான மக்கள் நடந்து சென்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிமென்ட் தளம் நடைபாதை சிதைந்து பல மாதங்களாக சீரமைக்க படாமல் உள்ளது.
இதனால் அந்த நடைபாதை வழியாக தினமும் நடந்து செல்லும் மக்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். அரசு மருத்துவமனைக்கு வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும், சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, இனி மேலாவது காலதாமதமின்றி நடைபாதையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!