போலீஸ் குடியிருப்பில் குடிநீர் வசதி கோரிக்கை
திருப்புத்துார் : திருப்புத்தூர் போலீஸ் குடியிருப்பில் தெருவிளக்கு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த போலீஸ் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
திருப்புத்தூர் பேரூராட்சி புதுப்பட்டியில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. தற்போது அதில் மகளிர் மற்றும் போக்குவரத்து போலீசார் குடும்பங்கள் வசிக்கின்றனர். 27 வீடுகள் அடுக்குமாடிகளாக கட்டப்பட்டுள்ளது.
அதில் இரண்டு மின்கம்பங்கள் நிறுவப்பட்டு உள்ளன. ஆனால் அதில் தெரு விளக்கு ஏதும் இதுவரை பொருத்தப்படவில்லை. தற்போது மேலும் கூடுதலாக சில வீடுகள் கட்டப்படுகின்றன. குடியிருப்பில்உள்ள வீடுகள் அனைத்திற்கும் மின்வெளிச்சம் பரவும் வகையில் பரவலாக தெருவிளக்கு வசதி ஏற்படுத்த பேரூராட்சியிடம் கோரப்பட்டுள்ளது. மேலும் இக்குடியிருப்பில் சரியான கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தவும், காவிரிக் கூட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கவும் பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!