பரமக்குடியில் கோடையை சமாளிக்க மின் சாதன பயன்பாடு அதிகரிப்பு
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கோடை காலத்தில் மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் பல்வேறு டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி ட்ரிப் ஆவதால் ஊழியர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
பரமக்குடி நகராட்சி காட்டு பரமக்குடி மின் அலுவலகத்தில் 110 கே.வி., உபமின் நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து 40 கே.வி., முதல் 200 மற்றும் 500 கே.வி., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
கோடை காலம் துவங்கிய நிலையில் ஒவ்வொரு வணிக அலுவலகம் உட்பட வீடுகளில் மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி டிரான்ஸ்பார்மரில் வயர்கள் எரிந்து டிரிப் ஆகின்றன.
ஆகவே ஒவ்வொரு நாளும் இவற்றை சரி செய்ய ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் மின் துண்டிப்பால் பொதுமக்கள் பணி செய்ய முடியாமல் தூக்கம் இன்றி உள்ளனர். பொதுவாக மின் பயன்பாடு அடிப்படையில் பகுதி வாரியாக டிரான்ஸ்பார்மர் லோடு திறனை அதிகரிப்பது வழக்கம்.
ஆனால் டிரான்ஸ்பார்மர்கள் இருப்பு உள்ள நிலையில் அவற்றை வைக்க அந்தந்த பகுதிகளில் இடம் தேர்வு செய்யும் போது சிக்கல் உண்டாகிறது.
மேலும் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் மின் தேவையை கருத்தில் கொண்டு ஒத்தி வைக்கப்படுகிறது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!