இரவு நேர பஸ்கள் நிறுத்தம் மீண்டும் இயக்க வலியுறுத்தல்
திருவாடானை : திருவாடானை, தொண்டியில் இருந்து இரவு நேர பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொண்டியிலிருந்து இரவு 9:20 மணிக்கு மதுரைக்கும், 9:35 க்கு ஸ்ரீரங்கத்திற்கும், திருவாடானையில் இருந்து இரவு 9:45க்கு காரங்காடு செல்லும் அரசு பஸ்கள் சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் இப்பஸ்களை நம்பி பஸ்ஸ்டாண்டிற்கு செல்லும் பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.
தொண்டி மக்கள் கூறுகையில், வீட்டில் உள்ள பணிகளை முடித்து விட்டு இரவில் மதுரை, திருச்சி செல்ல இப்பஸ்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
பஸ்கள் நிறுத்தப்பட்டதால் அவசர வேலையாக வெளியூர் செல்ல முடியாமல் பாதிப்பாக உள்ளது. மீண்டும் இந்த பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!