ADVERTISEMENT
மதுரை ; மதுரை தியாகராஜர் கல்வியியல் கல்லுாரியில் ஐ.கியூ.ஏ.சி., சார்பில் எதிர்காலத்திற்கான கல்விப் புரட்சி தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
தமிழ்நாடு கல்வியியல் கல்லுாரி தொழில்நுட்பத்துறை நிறுவனர் ராமகிருஷ்ணன் பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு, சாட் ஜி.பி.டி., மூடுல் போன்ற பல தளங்கள் வாயிலாகஎதிர்காலத்திற்கான பலதொழில் நுட்பங்களை மாணவர்கள் கற்கின்றனர்.
மாணவர்களுக்கு பாடங்கள் சம்பந்தமான வினா, பொதுவான சந்தேகம் என அனைத்துக்கும் பதில்களும் தரும். இந்த ஓபன் ஏ.ஐ., பல்வேறுபயனளித்தாலும் சிறு ஆபத்துகளும் உள்ளன. நாம் கேட்கும் வினாக்கள் அனைத்தையும் சேமிக்கிறது.
மனிதர்களுக்கும், இயந்திரங்களுக்கும் இடையே உரையாடல் மாதிரியான தகவல்களை பகிர்கிறது.புதிய தொழில் நிறுவனத்திற்கு இணைய தளம் உருவாக்குவது, கவிதை இயற்றுவது, அறிவியல் கட்டுரைகளுக்கு அறிமுகவுரை எழுதுவது, கணிதம் ஆகியனவும் செய்யும். இவ்வாறு பேசினர்.
மத்திய தொழில்நுட்ப கல்விமைய உதவி பேராசிரியர் ஏஞ்சல் ரத்னாபாய், தியாகராஜர் மேலாண்மை கல்லுாரி உதவி பேராசிரியர் செந்தில் பேசினர்.
முதல்வர் பிரகாஷ், உதவிப் பேராசிரியர்கள் தங்கவேல், ராஜாகுமார், டெல்மா பிரியா, பயிற்சி ஆசிரியர்கள் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களின் கல்லுாரி, பல்கலைகளின் பயிற்சி ஆசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!