ADVERTISEMENT
திருவாடானை : இருளில் மூழ்கிய திருவாடானை தாலுகா அலுவலகம் என்ற தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மின்விளக்கு வசதி செய்யப்பட்டு ஜொலிக்கிறது.
திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்திற்குள் சார்பதிவாளர், சார்நிலை கருவூல அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இங்கு இரவு 7:00 மணிக்கு மேல் வெளி வாசல் இருண்டு கிடக்கிறது. இதனால் இரவில் நீண்ட நேரம் பணிபுரிந்து வீடு செல்லும் ஊழியர்கள் பாதிக்கபடுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு காரங்காடு கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை இரவு 10:00 மணி வரை நீடித்தது. இருளாக இருந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவதிப்பட்டனர். பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பொருட்கள் திருடு போக வாய்ப்பு ஏற்பட்டது.ஆகவே மின் விளக்குகள் ஒளிர செய்ய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக தாசில்தார் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்ததின் பேரில் மின் விளக்குகள் ஒளிர்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!