ADVERTISEMENT
கீழக்கரை : கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் தோணி பாலம் அருகே காவிரி குடிநீருக்கான பிரதான குழாய் சேதமடைந்துள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து 19 கி.மீ.,க்கு குழாய் மூலம் கீழக்கரைக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை தோணி பாலம் அருகே கொட்டகுடி ஆற்றில் இதற்காக பிரத்தியேகமாக சிறு பாலம் அமைக்கப்பட்டு அவற்றின் மீது காவிரி பிரதான குழாய் செல்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பூசப்பட்ட வெள்ளை பூச்சு தற்போது பராமரிப்பின்றி துருப்பிடித்து வருகிறது. எனவே 120 மீ., நீளமுள்ள காவிரி பிரதான குழாயை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!