ஆட்டோவில் இருந்து விழுந்து ஒருவர் காயம்
கமுதி : விருதுநகர் அருகே ஆலங்குளத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி 40. உறவினர்கள் பெரிய கருப்பன், பாலமுருகன் ஆகியோருடன் ஆட்டோவில் அபிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்தனர்.
பின் திரும்பி சென்ற போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்றனர்.
பசும்பொன் அருகே சென்ற போது எதிரில் வந்த லாரிக்கு வழிவிட டிரைவர் முருகன் ஆட்டோவை திருப்பிய போது நிலை தடுமாறி கணேசமூர்த்தி கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கமுதி எஸ்.ஐ., முருகன் ஆட்டோ டிரைவர் முருகனை 30, கைது செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!