ADVERTISEMENT
வாகன ஓட்டிகள் சிரமம்
தேவிபட்டினம் : தேவிப்பட்டினத்தில் இருந்து இலந்தை கூட்டம் ரோட்டோரம் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, தேவிபட்டினம் அரசு மருத்துவமனை பிரிவு சாலையில் இருந்து, இலந்தைக்கூட்டம் வழியாக சித்தார்கோட்டை செல்வதற்கு ரோடு உள்ளது. இந்த ரோட்டின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ரோட்டை மறைத்துள்ளன.
இதனால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவில் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனர். மேலும், தேவிபட்டினம் முதல் இலந்தை கூட்டம் வரை ரோடு சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் மேலும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அதிகாரிகள் ரோட்டோர கருவேல மரங்களை அகற்றி சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!