முதுகுளத்துார் பணிமனையில் 12 அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம் பயணிகள் தவிப்பு
கடலாடி : முதுகுளத்தூர் போக்குவரத்து பணிமனையில் நேற்று முன்தினம் 12 டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிப்படைந்தனர்.
சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் குறைக்கப்பட்டதால் கிராம மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கருணாநிதி கூறியதாவது:
ஆளுங்கட்சி யூனியனில் உள்ள டிரைவர்கள் பெரும்பாலானோர் பணிக்கு வருவதில்லை. இதனால் முறையாக பஸ்கள் இயக்கக்கூடிய டிரைவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. ஆளுங்கட்சி என்ற போர்வையில் உலா வரும் டிரைவர்கள் முறையாக பணிக்கு வராததே பஸ்களை இயக்க முடியாததற்கு காரணம்.
அரசு பஸ்கள் முறையான பராமரிப்பின்றி உள்ளன. பெரும்பாலான பஸ்களில் நூலாம்படை பிடித்துள்ளது. இரவு நேரங்களில் பஸ்களில் பழுது நீக்கும் மெக்கானிக் தொழிலாளர் இல்லாத நிலையில் உள்ளனர். இதனால் அடிக்கடி கிராமப்புற பகுதி பஸ்கள் பிரேக் டவுன் ஆகிறது.
இருக்கையில் தூசி நிறைந்து காணப்படுகிறது. எனவே மீண்டும் முறையான வழித்தடங்களில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாயல்குடியில் இருந்து சென்னை சென்ற ஏ.சி., பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால் இங்கிருந்து சென்னை செல்வோர் தனியார் ஆம்னி பஸ்சை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!