ADVERTISEMENT
திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கி பாலமுருகன் சுவாமி கோயில் 9ம் ஆண்டு வைகாசி விசாக விழாவை முன்னிட்டு மே 24ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
மூலவர்கள் வினை தீர்க்கும் விநாயகர், பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. குடில் அமைக்கப்பட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் அரோகரா கோஷம் முழங்க வேல் வழிபாடு நடக்கிறது. விழாவின் 11 நாட்களும் தொடர்ந்து பனை ஓலை பட்டையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழா குழுவினர் கூறியதாவது: காலம் காலமாக இப்பகுதியில் பனை ஓலை பட்டை அன்னதானம் வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத இயற்கையுடன் இணைந்த அன்னதானம் உடலுக்கும் உள்ளத்திற்கும் வலு சேர்க்கிறது. பனை ஓலை பட்டையி பகல் மற்றும் இரவு நேரங்களில் சைவ அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
பனை ஓலை பட்டையின் மகத்துவம் அறிந்து ஆர்வமுடன் பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்கின்றனர். மே 31ல் பொது காவடி மூலம் கிராமம் சுற்றுதலும், ஜூன் 2ல் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து பால்குடம், காவடிகள் எடுத்து வந்து பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் பஞ்சந்தாங்கி கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!