ADVERTISEMENT
மதுரை ; மதுரை கே.புதுார் மூன்றுமாவடியில் 31 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதா, இல்லையா என 12 வாரத்திற்குள் விசாரணை நடத்த கடந்த ஆகஸ்டில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதுவரை உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. அதில் மதக்கூட்டம் நடக்க அனுமதிக்கக் கூடாது என்று ஹிந்து முன்னணியினர், கோட்ட செயலாளர் அரசுபாண்டி தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
அந்நேரத்தில் கலெக்டர் சங்கீதா வெளியே சென்றுவிட்டார். இதைதொடர்ந்து அலுவலக வாயிலில் அமர்ந்து முற்றுகையிட்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மனு கொடுத்துவிட்டு கலைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!