ADVERTISEMENT
திருவாடானை : திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தை சேர்ந்த வீரபாண்டி 22, பென்சில் முனையில் தேசிய தலைவர்களின் உருவங்களை செதுக்கி சாதனை புரிந்துள்ளார்.
திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வீரபாண்டி 22. தொண்டியில் உள்ள கடலியல் துறை கல்லுாரியில் எம்.எஸ்.சி., படித்துள்ளார்.
விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், சிறுவயதில் ஓவியங்கள் வரைவதில் ஆர்வமாக ஈடுபட்டார். தற்போது பென்சில் முனையில் அப்துல் கலாம், இயேசு உருவங்களை செய்து சாதனை புரிந்துள்ளார்.
வீரபாண்டி கூறுகையில், ஆரம்பத்தில் பென்சிலால் ஓவியங்கள் வரைந்து வந்தேன். அதே பென்சிலில் தலைவர்கள் உருவத்தை வடிவமைக்க ஆர்வம் ஏற்பட்டது. இதற்கு சிறிய அளவில் கத்தியை வாங்கி பென்சிலின் முனையில் செதுக்க ஆரம்பித்தேன்.
அதில் வர்ணம் தீட்டி அழகு படுத்தியுள்ளேன். அடுத்ததாக கருணாநிதி போன்ற பல தலைவர்களின் உருவங்களை செதுக்க முயற்சி எடுத்துள்ளேன், என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!