ADVERTISEMENT
மதுரை ; பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு தலைமை வகித்தார். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் கோரிக்கையை விளக்கி பேசினார். சுகாதார போக்குவரத்துத்துறை சங்க மாநில தலைவர் நடராஜன் துவக்கி வைத்தார். நிர்வாகிகள் முனியசாமி, கல்யாணசுந்தரம், பரஞ்ஜோதி, டான்சாக் மனோகரன், ரமேஷ், மணிகண்டன், பரமேஸ்வரன், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர். மாநில செயலாளர் ஜெயராஜேஸ்வரன் நிறைவுரையாற்றினார். மாரியப்பன் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!