வெள்ளிமலை கோயில்காடு பாதுகாப்பு கூட்டம்
மதுரை ; மதுரை மாவட்ட வன அலுவலகத்தில் வன அலுவலர் குருசாமி தபாலா தலைமையில் இடையபட்டி வெள்ளிமலை கோயில்காடு பாதுகாப்பு கூட்டம் நடந்தது.
பாரம்பரிய பல்லுயிரிய தலமாக அரிட்டாபட்டியை அறிவித்தது போல மதுரை வெள்ளிமலை கோயில் காடும் அறிவிக்கப்பட வேண்டும்என அரசையும், தமிழ்நாடு பல்லுயிரிய வாரியத்தையும் மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதற்கான ஆவணங்கள், ஒளிப்படங்கள், தரவுகளை மதுரை கிழக்கு தாலுகா அதிகாரியிடம் சமர்பிக்கப்பட்டது. வெள்ளிமலை கோயில்காடு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முனைப்போடு மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
டாக்டர் பத்ரி நாராயணன், பேராசிரியர் தேவி அறிவுசெல்வம், பேரவை நிர்வாகிகள் கார்த்திகேயன் பார் கவிதை, விஸ்வா, கார்த்தி, சபரி, கவித்தமிழ், வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!