எஸ்.ஐ., தேர்வு இலவச பயிற்சி
மதுரை ; மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 29 முதல் ஜூன் 3 வரை தினமும் காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
ஜூன் 3 உளவியல் வகுப்பு, மாதிரி தேர்வுகள் நடக்கும். இத்தேர்விற்கு ஜூன் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.பயிற்சி வகுப்புகளுக்கான பாடக்குறிப்புகளை வேலைவாய்ப்பு, பயிற்சித்துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம்.வேலைவாய்ப்பு அலுவலக நுாலகத்தில் அனைத்து வகையான போட்டி தேர்விற்கும் மாணவர்கள் தயார்படுத்திட ஏதுவாக புத்தகங்கள் உள்ளன.
எனவே விருப்பமுள்ள பட்டம் படித்தவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகலுடன் நேரில் வரலாம்என துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!