Load Image
Advertisement

பெயருக்கு நடத்தப்படும் குறைதீர்க்கும் கூட்டம்; நிவாரணம் கிடைக்கவில்லை என விவசாயிகள் புகார்

Farmers Grievance Meeting   பெயருக்கு நடத்தப்படும் குறைதீர்க்கும் கூட்டம்; நிவாரணம் கிடைக்கவில்லை என விவசாயிகள் புகார்
ADVERTISEMENT
அவர்கள் கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமையில் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.

இதற்கென அரசாணை வெளியிடப்பட்டு தற்போது வரை மற்ற மாவட்டங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

மதுரையில் மட்டும் கொரோனாவுக்கு பின் அதிகாரிகளின் விருப்பத்திற்கேற்ப மாற்றப்பட்டது.அதிகாரிகள் நினைக்கும்தேதிக்கு குறைதீர் கூட்டத்தை நடத்தினர். 3வது வெள்ளிக்கு பதிலாக கடந்த இரண்டாண்டுகளாக 4வது வெள்ளிக்கிழமையில் தான் கூட்டம் நடத்தப்படுகிறது. ஒருமாதத்தில் 5 வெள்ளி வந்தால் கடைசி வெள்ளிக்கு கூட்டம் மாற்றப்பட்டது.

கூட்டத்தில் 80 சதவீத புகார் நீர்வளத்துறை சார்ந்ததாகவே உள்ளது. 'நடவடிக்கை எடுக்கப்படும்' என பெயருக்கு அதிகாரிகள் தெரிவிக்க, 'சரிசெய்து விடுவார்கள்' என கலெக்டர் பெயருக்கு தெரிவிக்க, வெறும் சம்பிரதாயத்திற்காக மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட்டது. நீர்வளத்துறை புகார்களை விசாரிக்க மாதந்தோறும் அந்தந்த தாலுகாக்களில் உதவி பொறியாளர் தலைமையில் கூட்டம் நடத்தி அங்கேயே பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

அதில் தீர்வு கிடைக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரலாம். ஆனால் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒவ்வொரு முறையும் மனுவை கொண்டு வருகிறோம். பிரச்னைகளை சொல்கிறோம். எங்கள் குறைகளை அதிகாரிகள் கேட்கின்றனர். மொத்தத்தில் இது 'குறை கேட்கும்' முகாமாக மட்டுமே உள்ளது. 'குறை தீர்' முகாமாக மாற்ற வேண்டும்.

எல்லா மாவட்டங்களிலும் உள்ளது போல, மீண்டும் மாதத்தில் 3வது வெள்ளிக்கிழமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்றனர். மே மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மே 31 புதன்கிழமை நடத்தப்பட உள்ளது.


வாசகர் கருத்து (1)

  • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

    அரசாங்கத்தில் குற்றவாளிகள் அதிகரித்துவிட்டதால் அவர்களிடம் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக குற்றச்சாட்டிற்கு ஆளானவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை காப்பாற்றிவிடுகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement