முருக கடவுளை இழிவாக பேசிய தமிழக அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: வேலூர் இப்ராஹிம்
பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேட்டி:
தமிழக வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தரம் தாழ்ந்து, ஹிந்துக் கடவுள் முருகனை இழிவாக பேசியுள்ளார். சுய நினைவோடு உள்ளவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள். தான் சார்ந்த சமயத்தையே கொச்சைப்படுத்தி அவர் பேசி உள்ளார்; அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆக, அஞ்சு வருஷம் ஆட்சி முடியுற வரைக்கும், 'இன்னைக்கு யாரு, என்ன வம்பை இழுத்துட்டு வருவாங்களோ'ன்னு தான் முதல்வர் காலத்தை ஓட்டணும் போல!
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:
பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை, அரசியல் காரணங்களை மனதில் வைத்து புறக்கணிப்பதை, மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். செங்கோல், தமிழகத்திற்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கக் கூடியது. தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டை பறைசாற்றுகிறது. தமிழகத்தை ஆளும் கட்சி, அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள், நாட்டிற்கும், தமிழகத்திற்கும் சிறப்பு சேர்க்கக் கூடிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும்.
புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை அரசியல் காரணங்களுக்காக புறக்கணிச்சா, லோக்சபா தேர்தல்ல, மக்கள் அவர்களை புறக்கணித்து, அந்த கட்டடத்துக்குள்ள நிரந்தரமா போக விடாம பண்ணிடுவாங்க!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளின் கட்டமைப்பு வசதிகளை, அண்ணா பல்கலைக்கு இணையாக மேம்படுத்த வேண்டும். அதற்கு மாறாக உறுப்பு கல்லுாரிகளை மூடினால், ஆசிரியர்களும், மாணவர்களும் தான் பாதிக்கப்படுவர். பத்தாண்டுகளுக்கு மேலாக உறுப்பு கல்லுாரிகளில் பணியாற்றியவர்களால், இப்போது, வேறு கல்லுாரிகளுக்கு சென்று பணியில் சேர முடியாது. ஆசிரியர்கள், மாணவர்கள் நலன்களை கருத்தில் கொண்டு, பல்கலையும், தமிழக அரசும் முடிவெடுக்க வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை எல்லாம் எங்க பார்க்க போறாங்க... ஆட்சியாளர்களின் நலனை பார்த்து தானே, எல்லா முடிவுகளையும் எடுக்கிறாங்க!
தமிழக காங்., துணை தலைவர் வாழப்பாடி ராம.சுகந்தன் அறிக்கை:
செங்கோல்படி மத்திய அரசு நடக்கிறதா? மல்யுத்த வீராங்கனைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நியாயம் வேண்டி போராடி வருகின்றனர். பில்கிஸ் பானு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டனர். உ.பி., - பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்காக, வெகு நாளாக கைது செய்யப்படாமல், நீதிமன்றம் தலையிட்ட பின் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல, பல உதாரணங்களை சொல்லலாம்.
இந்த மாதிரி உதாரணங்களை எல்லா ஆட்சியிலும் சொல்லலாம்... அதுக்காக நாட்டின் அடையாளமான புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழா, 'பாய்காட்' எல்லாம் ரொம்ப ஓவர்!
வாசகர் கருத்து (8)
மக்கள் உங்களை புறக்கணிப்பார்கள்-வாசன் அறிக்கை. யாரு அந்த வாசன்? அவரை எப்பவோ மக்கள் புறக்கணிச்சிட்டாங்கோ
வேலூர் இப்ராஹிம் அவர்களின் வேண்டுகோள் சரியானது. Shame Shame for DMK.
இந்துக்கள் சொரணையற்றவர்கள்...
எலி அம்னணமா ஓடுதேன்னு...தஇந்து மதத்தில் எல்லாத் தரப்பினருக்கும்.இடம் உண்டு. நாத்திகம் உட்பட. இவிங்களை மாதிரி கழுற்ற அறுக்க மாட்டாங்க.
ஓட்டுக்கு மட்டும் பிகிச்சை எடுப்பானுங்க ,பதவிக்கு வந்தவுடன் தங்கள் சுயரூபத்தை காட்டுவானுங்க