ரோஜ்மா நகரில் 3 ஆண்டாக எரியாத ஹைமாஸ் விளக்கு
சாயல்குடி : சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரோஜ்மாநகரில் மூன்று ஆண்டுகளாக ஹைமாஸ் விளக்கு எரியாததால் மீனவர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
கடந்த 2020ல் ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு தற்போது வரை பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மீனவர்கள் டார்ச் லைட் மற்றும் அலைபேசி வெளிச்சத்தில் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனர்.
இரவு நேரத்தில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே ஹைமாஸ் விளக்கை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கடலாடி யூனியன் துணை தலைவர் ஆத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!