ADVERTISEMENT
திருமங்கலம், : திருமங்கலம் அருகே விடத்தகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட எட்டுநாழி கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று விடத்தகுளம் கண்மாய்க்கு 100 நாள் வேலைக்காக சென்றனர். எட்டுநாழி கிராமத்தில் இருந்து 3 கி.மீ., துாரம் நடந்து விடத்தகுளம் கண்மாய்க்கு செல்ல வேண்டியுள்ளதால் 4 பேர் 5 நிமிடம் தாமதமாக வந்தனர்.
இதனால் அவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டது. இதை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பணித்தள பொறுப்பாளர்கள் கூறுகையில், ''வேலை செய்பவர்கள் குறித்து தினமும் உரிய நேரத்தில் ஆன்லைனில் போட்டோ எடுத்து 'அப்லோடு' செய்ய வேண்டும். தாமதமாக வருபவர்களை அதில் சேர்க்க இயலாது. எனவே வேலை வழங்க முடியாது என கூறினோம்'' என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!