ராமநாதபுரம் பஜாரில் துாங்கும் போலீசார்
ராமநாதபுரம : -ராமநாதபுரம் பஜார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏற்படும் தொடர் திருட்டால் போலீசார் துாங்குகின்றனரா என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் ராணிசத்திர தெரு பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் சதிஷ் 35. நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளார். இவரது வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 28 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
இதே போல் அதே பகுதியில் தனியார் வங்கி உதவி மேலாளர் கேசவன் 35, வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி குத்து விளக்கை திருடி சென்றுள்ளனர்.
இதே போல் ராமநாதபுரத்தில் டூவீலர் திருட்டு, பகலில் வீடு புகுந்து திருட்டு என தொடர்கிறது.
இதனால் ராமநாதபுரம் பஜார் போலீசார் மீது நம்பிக்கை போய் திருட்டு குறித்து அச்சம் ஏற்படுகிறது.
மாவட்ட எஸ்.பி.,தங்கதுரை பஜார் போலீசார் மீது சாட்டையை சுழற்றி ரோந்து பணிகளை முறையாக முடுக்கிவிட வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!