ஏலத்தில் நெல் விற்பனை
மதுரை : உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வலங்காகுளம் விவசாயியின் 329 மூடை அக்சயா ரக நெல் விற்பனை நடந்தது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் உள்ள உசிலம்பட்டி ஒழுங்குமுறை கிட்டங்கியில் உசிலம்பட்டி விவசாயி பரமனின் 329 நெல் மூடைகள் இருப்பு வைக்கப்பட்டன. நேற்று மறைமுக ஏலம் நடந்தது. கிலோ நெல் ரூ.31 வீதம் ரூ.6லட்சத்து 65ஆயிரத்து 415க்கு விற்பனையானது.
மதுரை விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி கூறுகையில்,''விளைபொருளுக்கு தரகு இன்றி சரியான எடையுடன் விவசாயிக்கு நல்ல விலை கிடைத்தது. உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கமிஷன் இன்றி விற்று பயன்பெறலாம்'' என்றார். விற்பனை தொடர்புக்கு மேற்பார்வையாளரை 96775 50210ல் தொடர்பு கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!