ரோடுகளால் தினம் தினம் ரோதனை திணறடிக்கும் பள்ளங்களால் அவதி
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சேதமான ரோடுகளால் மேடு,பள்ளங்கள் உருவாக தினமும் அவ்வழிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதன் மீது அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கலாமே
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் ரோடுகள் குண்டும், குழியுமாக படு மோசமாக காட்சியளிக்கிறது. தினமும் வேலைக்குசெல்வோர், பள்ளி,கல்லுாரி செல்லும் மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்படுகின்றனர். தொடரும் இப்பிரச்னையால் வாகன ஓட்டிகள் சேதமான ரோடுகள் இருக்கும் வழியாக செல்வதை தவிர்த்து மாற்று பாதைகளில் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மழை நேரங்களில் சொல்ல முடியாத அளவிற்கு ரோடு பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்க வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இதோடு ஆங்காங்கு ரோட்டிகளின் நடுவே பாதாளசாக்கடை மேன்ேஹாலும் தலைதுாக்கியப்படி வாகன ஓட்டிகளை பயமுறுத்துகின்றன. சில இடங்களில் பாதாளத்திற்கு சென்று படுகுழிகளாக காட்சியளிக்கின்றன.
அதிகாரிகளும் இது போன்ற சேதமான ரோடுகள் வழியாகதான் தினமும் செல்கிறார்கள். இருந்தபோதிலும் அவர்களுக்கும் சேதமான ரோடுகளை சீரமைக்க வேண்டும் என எண்ணம் இது வரை வரவில்லை. மக்களும் இதுதொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுக்கத்தான் செய்கிறார்கள் ஆனாலும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. ஆண்டுக்கணக்கில் சீரமைக்கப்படாத ரோடுகளை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அதிகாரிகளையும், அரசாங்கத்தையும் வசை பாடிய செல்கின்றனர். அத்திபூத்தது போல் அதிகாரிகளுக்கு எப்போதாவது இதுபற்றி நினைவு வந்தால் மட்டும் தற்காலிகமாக கிரசர் மணல்களை போட்டு சேதமான ரோட்டில் ஏற்பட்டுள்ள மேடு,பள்ளங்களை சரி செய்கின்றனர். அதுவும் அடுத்த மழையில் மாயமாகி விடுகிறது.
அதன் பின்பு பழைய நிலையே நீடிக்கிறது. இதோடு பெரும்பாலான ரோடுகளில் சேதமுற்ற பகுதியில் தார் கொண்டு ஒட்டுப்போடுகின்றனர். நிரந்தரமாக சீரமைக்காமல் அவ்வப்போது ஏதோ பணிகளை செய்கின்றனர்.இதற்காக பலமுறை செலவிடும் பணத்தில் புதிய ரோடே போட்டுவிடலாம். ஆனால் இதை செய்யாது அரசு நிதியை தான் வீணடிக்கின்றனர். மாவட்ட நிர்வாகமாவது நகரில் ரோடுகளால் மக்கள் படும் சிரமத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!