ADVERTISEMENT
மேலுார் : மேலுார் திரவுபதையம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று தர்மராஜன் மற்றும் திரவுபதையம்மனுக்கு சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி திருக்கல்யாணம் நடத்தினார்.
முன்னதாக காப்பு கட்டிய பக்தர்கள் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மே 31 ல் பீமன் கீசன் வேடம், ஜூன் 6 சக்கர வியூக கோட்டை, 9ல் அர்ஜூனன் தவசு, 11ல் பீமன் கூந்தல் விரிப்பு, 12ல் கூந்தல் முடிப்பு, 13ல் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதைதொடர்ந்து சிம்மவாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து அருள்பாலிக்கிறார்.
ஜூன் 14 மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!