ADVERTISEMENT
மதுரை : மதுரையில் கிரடாய் அசோசியேஷனில் 2023--25ம் ஆண்டிற்கான புதிய தலைமை குழு நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங், டி.ஆர்.டி.ஏ., திட்ட இயக்குநர் சரவணன் முன்னிலை வகித்தனர். கிரடாய் அசோசியேஷன், அதன் செயல்பாடுகள் குறித்து கமிஷனர் பேசினார். ராமகிருஷ்ணன் சேர்மனாக, முத்துவிஜயன் தலைவராக, யோகேஷ் திக்கொண்ட ஈஸ்வர் லால் செயலாளராக, ஜெயக்குமார் பொருளாளராக, ஸ்ரீகுமார், ராதாகிருஷ்ணன் துணைத் தலைவர்களாக, சையது உமர், அழகப்பன் இணைச் செயலாளர்களாக பதவியேற்றனர்.
கிரடாய் தமிழ்நாடு தலைவர் இளங்கோவன், தேசிய துணைத் தலைவர் ஸ்ரீதரன், விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சங்கர சீதாராமன் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். பேராசிரியர் ஞானசம்பந்தன், கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!