திருமங்கலத்தில் திடீர் மின்தடை
திருமங்கலம், : திருமங்கலம் நகர் பகுதி, பஸ் ஸ்டாண்ட், கற்பக நகர், காமராஜபுரம் பகுதிகளில் நேற்று மதியம் 3:00 மணி முதல் மாலை 6:10 மணி வரை மின் விநியோகம் திடீர் என நிறுத்தப்பட்டது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''திடீர் மழை, மின்னல் காரணமாக திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் பகுதி மற்றும் தெற்கு தெரு பகுதியில் உள்ள இரண்டு டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு, மின் வினியோகம் தடைபட்டது'' என்றனர்.
திருமங்கலத்தில் நேற்று 5 நிமிடங்கள் சாரல் மழைக்கு 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது குறிப்பிடப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!