சிவவரி செய்திகள்: கரூர்
13 பவுன் நகை திருட்டு
குளித்தலை,- குளித்தலை அடுத்த, மாயனுார் அங்கு நகரை சேர்ந்தவர் மணி, 64. மின் வாரியத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில் கரூர் மருத்துவமனைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த, 13 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து, மணி கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரும் 29ல் பென்சனர் கூட்டம்
கரூர்,-திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் வரும், 29ல் கரூரில் நடக்கிறது.
இதுகுறித்து, திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர் முருகவேல் வெளியிட்ட அறிக்கை: பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் வரும், 27 ல் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை, கரூர் அய்யர்மலை பொன் கலைமகள் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடக்கிறது. அதில், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு குறைகளை, உரிய ஆவணங்களுடன் தெரிவித்து, தீர்வு பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!