விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கரூர்,-கரூர் மாவட்ட, மாதாந்திர விவசாயிகள் குறை தீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில், நேற்று நடந்தது.
அதில், வடசேரியில் பள்ளி வளாகத்தில், தாழ்வாக செல்லும் மின்சார வழித் தடத்தை மாற்றி அமைப்பது, உள் வீரராக்கியம் பகுதியில் உள்ள, ஏரியில் விவசாயத்துக்கு தேவையான வண்டல் மண் எடுப்பது, ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் மரக்கன்றுகளை நடுவது, விவசாய விளைபொருட்களை கொண்டு செல்ல தார்ச்சாலை அமைப்பது, தேவர்மலை பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், உடனடியாக குடிநீர் வழங்குவது உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கு, அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.
அதைதொடர்ந்து, வருவாய் துறை, தோட்டக்கலை துறை சார்பில், 18 பயனாளி களுக்கு, 16 லட்சத்து, 91 ஆயிரத்து, 127 ரூபாய் மதிப்பில்,
பல்வேறு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்.
டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சைபுதீன், ஆர்.டி.ஓ.,க்கள் ரூபினா (கரூர்) புஷ்பா தேவி (குளித்தலை) கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) உமா உள்பட அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!