அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கரூர்,-அமராவதி அணைக்கு, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கேரளா மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் காலை, அமராவதி அணைக்கு வினாடிக்கு, 111 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 254 கன அடியாக அதிகரித்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 63.45 அடியாக இருந்தது.
மாயனுார் கதவணை
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 753 கன அடியாக இருந்தது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 1,940 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 28.67 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப் பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 12.82 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!