கலை நிகழ்ச்சிக்காக போடப்பட்ட மேடை அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி
கரூர்,-கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே, கலை நிகழ்ச்சிக்காக போடப்பட்ட மேடை அகற்றப் படாததால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப் படுகின்றனர்.
கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி பெருவிழாவையொட்டி, கரூர் மாநகராட்சி சார்பில் மண்டகப்படி விழா கடந்த, 24ல் நடந்தது. அதையொட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்த கடந்த, 22ல் கரூர் மாநகராட்சி அலுவலகம் முன், சாலையின் நடுவே மேடை அமைக்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகள் கடந்த, 24 இரவு நிறைவு பெற்றது. ஆனால், கலை நிகழ்ச்சிக்காக போடப்பட்ட மேடை, நேற்று மாலை வரை அகற்றப்படவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
எனவே, கரூர் மாநகராட்சி அலுவலகம் முன், கலை நிகழ்ச்சி நடத்த அமைக்கப்பட்டுள்ள, மேடையை உடனடியாக அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!