வருமான துறை சோதனை எதிரொலி கரூர் மாநகராட்சி கூட்டம் திடீர் ரத்து
கரூர்,-கரூரில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வீடுகளில், வருமான வரித்துறை சோதனை நடக்க இருந்த நிலையில், மாநகராட்சி கூட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டது.
கரூரில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில், நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்த வந்தனர். அப்போது, கரூர் ராம
கிருஷ்ணாபுரத்தில் உள்ள, அசோக்குமார் வீடு முன், 100 க்கும் மேற்பட்ட தி.மு.க., வினர், மாநகராட்சி கவுன்சிலர்கள், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா தலைமையில், குவிந்தனர்.
அதேபோல், துணை மேயர் தாரணி சரவணன் வீட்டிலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதனால், நேற்று காலை நடக்கவிருந்த, கரூர் மாநகராட்சி சாதாரண கூட் டம், அவரச கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இக்கூட்டம் வரும், 29 ல் நடக்க உள்ளதாக, கரூர் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!