நெல்லுக்கு விலை இல்லாததால் பருத்திக்கு மாறிய விவசாயிகள்
எருமப்பட்டி,-எருமப்பட்டியில் நெல்லுக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் பருத்தி பயிருக்கு மாறியுள்ளனர்.
நாமக்கல் கொல்லிமலையில் பெய்யும் கனமழையால், எருமப்பட்டி அருகே, துாசூர் ஏரி கடந்த, இரண்டு ஆண்டாக நிறைந்து வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கடந்தாண்டு ஆர்வமுடன் நெற்பயிர் நடவு செய்தனர். ஆனால், நெல்லுக்கு போதிய விலை கிடைக்காததால் வேறு வழியின்றி பாதி விலைக்கு விற்றனர்.
இந்தாண்டும் கொல்லிமலையில் பெய்த கன மழையால் ஏரி நிறைந்த நிலையில், இப்பகுதி விவசாயிகள் ஆர்வமுடன் முதல்போக நெல் நடவு செய்தனர். ஆனால், நெல்லுக்கு போதிய விலை கிடைக்காததால், தற்போது ஏரியில் தண்ணீர் இருந்தும், மாற்று பயிருக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கடந்தாண்டு நெல்லுக்கு போதிய விலை கிடைக்காமல், நெல்லை கோவில் வளாகத்தில் கொட்டி வியாபாரிகள் வருகைக்காக காத்திருந்தோம். இந்தாண்டும் போதிய விலை இல்லை. தற்போது பருத்திக்கு நல்ல விலை உள்ளதால், பருத்தி பயிரிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!