Load Image
Advertisement

பட்டியல் இனத்தவருக்கு மானியத்துடன் கடனுதவி

நாமக்கல்,--''பட்டியல் இன மக்கள், பண்ணை அமைக்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது,'' என, கலெக்டர் உமா தெரிவித்தார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' குறித்து, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம், கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.
அப்போது அவர் கூறியதாவது: பட்டியலினத்தவர், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மக்களை தொழில் முனைவோராக மாற்ற, 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை' தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 2023 ஏப்ரலுக்கு பின், ஆரம்பித்துள்ள அனைத்து திட்டங்களும் தகுதி வாய்ந்தவை ஆகும்.
பட்டியலினத்தவர், பழங்குடியினரை கொண்டு ஆரம்பிக்கப்படும் தனிநபர் நிறுவனம், பங்குதாரர் நிறுவனம், எல்.எல்.பி., நிறுவனம் மற்றும் (பி) லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம். குறைந்தபட்ச வயது வரம்பு, 18 வயது முடிந்திருக்க வேண்டும். அதிகபட்சம், 55 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை. ஆட்டு பண்ணை, மாட்டு பண்ணை, கோழிப்பண்ணை, மீன் பண்ணை, பன்றி பண்ணை, இறால் வளர்ப்பு ஆகிய திட்டங்களுக்கு, மானியத்துடன் கடன் வசதி பெறலாம்.
விவசாயத்திற்கு தேவையான கருவிகளை, இத்திட்டத்தின் மூலம் வாங்கி வாடகைக்கு பயன்படுத்தலாம். குளிர்பதன கிடங்கு, சேமிப்பு கிடங்கு, கல்யாண மண்டபம், தங்கும் விடுதி, பெட்ரோல் பங்க், காஸ் ஏஜென்சி ஆகியவற்றை அமைப்பதற்கும் இத்திட்டத்தின் மூலம் கடன் வசதி பெறலாம். ஆட்டோ, டாக்ஸி, ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, லாரி, பஸ், வேன், போர்வெல் வண்டி, எர்த் மூவர்ஸ் மற்றும் செப்டிக் டேங்க் கிளீனிங் வேன் ஆகிய வாகனங்களை மானியத்துடன் வாங்கி பயனடையலாம்.
திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம் அதிகபட்சமாக, 1.50 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். 6 சதவீதம் வட்டி மானியமாக வழங்கப்படும்.
விருப்பமுள்ள அனைவரும் https://msmeonline.tn.gov.in/aabcs என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement