Load Image
Advertisement

தராசுகளுக்கு முத்திரை கட்டணம் உயர்வு திரும்ப பெற வணிகர் சங்கம் கோரிக்கை

நாமக்கல்-'தராசுகளுக்கான முத்திரை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த, மூன்றாண்டுகளுக்கு முன், தராசுக்கான முத்திரை கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது. கொரோனா காலத்தில் மிகவும் சிரமத்துக்குள்ளாகி, வணிகர்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலைக்கு சென்று, தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சிறு வணிகர்கள் பயன்படுத்தும் எடை போடும் தராசுகளின் ஆண்டு முத்திரை கட்டணத்தை, 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
மேலும், முறையான பயன்பாட்டிற்கான அபராத கட்டணத்தையும் உயர்த்தி அறிவித்துள்ளது. அதில், குறிப்பாக, 30 கிலோ வரை எடை போடும் தராசுகளின் முத்திரை கட்டணத்தை, 400ல் இருந்து, 600 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
அதேபோல், ஒவ்வொரு எடை போடும் தராசுகளின் அளவுகளுக்கேற்ப அதன் முத்திரை கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நெருக்கடியான பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, உயர்த்தப்பட்ட முத்திரை கட்டணம் மற்றும் அபராத கட்டண அறிவிப்பை திரும்ப பெற்று, சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement