சிலவரி செய்திகள்: நாமக்கல்...
பள்ளிவாசலில்
பா.ஜ., விளக்கம்
நாமகிரிப்பேட்டை,-நாமகிரிப்பேட்டை பள்ளிவாசலில், மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
நாமகிரிப்பேட்டை-அரியாகவுண்டம்பட்டி சாலையில் உள்ள பள்ளி வாசலில், நேற்று மதியம் சிறப்பு தொழுகை நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சிறுபான்மை அணி தலைவர் ஷாஜஹான் கலந்து கொண்டார்.
தொடர்ந்து அங்கிருந்த முத்தவல்லி லியாகத்அலி மற்றும் அஜ்ரத் அப்துல்லா முன்னிலையில், பிரதமரின் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். இத்திட்டத்தில் இணைவதால் கிடைக்க கூடிய பயன்கள் குறித்து கேட்டறிந்தனர்.
ஜல்லிக்கட்டு ஏற்பாடு
கலெக்டர் நேரில் ஆய்வு
ராசிபுரம்,-நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி ஊராட்சி, தும்பல்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி, இன்று நடக்கிறது.
மைதானத்தில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அப்போது, ஜல்லிக்கட்டு மைதானம், வாடிவாசல், வீரர்கள் வர தனிப்பாதை, இரும்பு தடுப்பு, காளைகள் வெளியேறும் பகுதி உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.
மேலும், அவசர சிகிச்சை அளிக்க தனி இடம், ஆம்புலன்ஸ் செல்ல வழி உள்பட பாதுகாப்பு ஏற்பாடு, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, ஆர்.டி.ஓ., சுகந்தி, டி.எஸ்.பி., செந்தில்குமார், தாசில்தார் சுரேஷ், பி.டி.ஓ., பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!