ரயில் உபயோகிப்பாளர் சங்கம் கொண்டாட்டம்
நாமக்கல்,-நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில், ரயில்வே ஸ்டேஷன் துவக்கப்பட்டு, நேற்று முன்தினத்துடன், 10 ஆண்டு நிறைவடைந்தது. அதை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு நிறைவு, 11ம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடினர்.
மாவட்ட தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திக், பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன் வழியாக சென்ற சென்னை-பாலக்காடு, பெங்களூரு-நாகர்கோயில் ரயில்களில் இருந்து வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!