Load Image
Advertisement

உரிமமின்றி நர்சரியில் செடிகள் விற்பனை நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

நாமக்கல்,--'உரிமம் இல்லாமல் நர்சரி மூலம் செடிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிபபு:
உரிமம் பெறாமல் செடி, நாற்றுகளை விற்பனை செய்பவர்கள் மீது, விதைகள் கட்டுப்பாட்டு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிமம் வேண்டி விண்ணப்பிக்க, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 4வது தளத்தில் அறை எண். 402ல் இயங்கும், விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து, கட்டணம், 1,000 ரூபாய் செலுத்தி, 'லைசென்ஸ்' பெறலாம்.
பழம், காய்கறி நாற்றுகள், தென்னங்கன்றுகள், இருப்பு பதிவேட்டில் பயிர் மற்றும் ரகம் வாரியாக இருப்பு வைத்து பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். விற்கப்படும் நாற்றுகளுக்கு விற்பனை ரசீது, வாங்குபவர்கள் கையொப்பம் பெற்று வழங்க வேண்டும்.
இருப்பு மற்றும் விலை பலகை பராமரிக்க வேண்டும்; லைசென்ஸ் இல்லாமல் நர்சரி அமைத்துள்ளவர்கள், உடனடியாக விண்ணப்பித்து லைசென்ஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் பெறாமல் விற்பனை செய்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement