அரசு பள்ளியில் நீதிமன்றம் முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு
சேந்தமங்கலம்,-சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், சேந்தமங்கலம் அரசு ஆண்கள் பள்ளியில் நீதிமன்றம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் மாணவர்கள், உதவி கலெக்டர் (நிலம்) நடேசனிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டி பஞ்.,ல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு, 6 முதல் பிளஸ் 2 வரை, 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, விளையாட்டு மைதானத்தில் நீதிமன்றம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பல்வேறு அரசு துறைகளில் அதிகாரிகளாகவும், காவல் துறை, ராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர்.
எனவே, பள்ளி கல்வித்துறைக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி, மாற்று இடத்தில் நீதிமன்றம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே, பள்ளி கல்வித்துறைக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி, மாற்று இடத்தில் நீதிமன்றம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!