சிலவரி செய்திகள்: நாமக்கல்
செல்வமுத்து மாரியம்மன்
திருவிழா கோலாகலம்
மல்லசமுத்திரம்,-ராமாபுரம் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில், நேற்று திருவிழா கோலாகலமாக நடந்தது.
மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட, ராமாபுரம் கிராமத்தில் செல்வமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த, 16 காலை, 8:00 மணிக்கு, அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
நேற்று காலை, 6:00 மணி முதல் மாலை வரை, பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், அழகு குத்துதல், வண்டி வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. தொடர்ந்து, நாளை பொட்டு சுவாமிக்கு, பொங்கல் வைக்கும் வைபவம் நடக்கிறது.
மது விற்றவர் கைது
குமாரபாளையம்,--குமாரபாளையம் பகுதியில் மது விற்பதாகவும், கள் இறக்குவதாகவும், குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., சந்தியா உள்ளிட்ட போலீசார் வி.மேட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு செல்வராஜ், 51, என்பவர் மது விற்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து, மது பாட்டில்களை
பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். இதேபோல், கத்தேரி வாய்க்கால் பாலம் பகுதியில் ரோந்து சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த ராஜூ, 38, என்பவர் கள் இறக்கி கொண்டிருந்தார். அவரை கைது செய்தனர்.
கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு
ஓட்டலில், மது குடிக்க அனுமதித்ததற்காக
சபரிபாலாஜி, 27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்லில் இன்று
தி.மு.க., செயற்குழு
நாமக்கல்,-நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், இன்று நடக்கிறது. கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும்' என, மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழுக் கூட்டம், இன்று மாலை, 5:00 மணிக்கு, நாமக்கல் நளா ஓட்டலில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வக்கின்றனர்.
அதில், முன்னாள் எம்.பி.,-எம்.எல்.ஏ.,க்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர், சிறப்பு அழைப்பாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!