வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம்
ஈரோடு,-தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம், ஈரோடு காளை மாட்டு சிலை அருகே நடந்தது. ஈரோடு மாவட்ட செயலாளர் வெங்கிடு, மாநில துணை தலைவர் மகாவிஷ்ணன் உட்பட பலர் பேசினர்.
தேர்தல் வாக்குறுதிப்படி புதிய பென்ஷன் திட்டத்தை, அரசு ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு வழங்கும் அதே நாளில், அதே விகிதத்தில் வழங்க வேண்டும். அமைச்சு பணியாளர், தொழில் நுட்ப ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக, 15,700 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!