நள்ளிரவில் விரட்டிய யானை தப்பி ஓடிய விவசாயி சீரியஸ்
பவானிசாகர்,-பவானிசாகரில் நள்ளிரவில் யானை விரட்டியபோது, தப்பி ஓடிய விவசாயி, பலத்த காயமடைந்தார்.
பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து, வெளியேறிய ஒரு யானை, நேற்று முன்தினம் நள்ளிரவில் பவானிசாகர் அணை பகுதிக்கு வந்தது. அணை முன்புற பூங்காவின் காம்பவுண்ட் சுவரை உடைத்து தள்ளி, இரும்பு கேட்டை சேதப்படுத்தியது. பின் அங்கிருந்து சென்று, பவானிசாகர் போலீஸ் குடியிருப்பு எதிரில், விவசாயி சுப்பையன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு சிமென்ட் மேற்கூரையை தும்பிக்கையால் உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு வந்த சுப்பையனை, யானை துரத்தியது. அதிர்ச்சியடைந்த ஓடியபோது கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் யானையை விரட்டி விட்டு, சுப்பையனை மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். கடந்த சில நாட்களாக, இந்த யானை தினமும் இரவில் அட்டகாசம் செய்வதால், பவானிசாகர் மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானையை வனப்பகுதிக்குள் விரட்டாமல், வனத்துறையினர் மெத்தனமாக உள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!